தமிழர்களின் வர்த்தகத்தை புறக்கணியுங்கள்: இனவாதம் கக்கும் சிங்கள பேராசிரியர்

breaking

தமிழ்தேசிய கட்சிகளின் அழைப்பில் வடகிழக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு ரஜரட்ட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சிசிர சிறிபத்தன டுவிட்டரில் பதிவிட்டமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் உரிமையைக் கோரி இடம்பெரும் ஒரு அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையாக இந்த ஹர்த்தால் அமைகின்றது. அந்த எதிர்ப்பின் பிரதிபலிப்பு சிங்கள வணிகங்களுக்கு எதிரானதல்ல என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

இந்நிலையில் ஒரு பேராசிரியராக இருக்கும் இவருக்கு இவ்வாறான தொடர்ச்சியான இனவெறி பதிவுகள் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்றும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.