எண்ணெய் கப்பல் பணியாளர்கள் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்திய எண்ணெய் கப்பல் பணியாளர்களை தொடர்புகொண்ட கொழும்பு துறைமுக பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய எண்ணெய் கப்பலில் வந்த 17 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றமை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தங்கள் குடும்பத்தவர்களுடன் தொடர்பிலிருந்த ஐவர் உட்பட கப்பலில் ஏறிய அனைவரையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுடன் தொடர்பிலிருந்த 34 பேரை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது ஒருவாரத்துக்குள் தெரியவரும் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.