கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதன்படி வவுனியா பசார் வீதியில் உள்ள கடைகளை திறக்குமாறு தமிழ் வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும், வர்த்தகர்கள் கடைகளைத் திறக்காமல் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.