பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் – கடற்படைத் தளபதி சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயா்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் முஹம்மது சப்தார் கான் நேற்று(24) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகரை வாழ்த்திய கடற்படை தளபதி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான பரஸ்பர நலன்களைப் பற்றி கலந்துரையாடினாா்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com