
வவுனியாவில் ஹெ ரோயின் போ தைப் பொ ருளுடன் நேற்று (15.04.2020) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆர்.கே.சீ.ரி.ரத்னாயக்கா நெறிப்படுத்தலில் வவுனியா போதைப் பொ ருள் தடுப்பு பிரிவு பொலிஸார் மன்னார் வீதி, பாலாமைக்கல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை சோதனைக்குட்படுத்தினர்.
இதன்போது 25 வயதுடைய இளைஞர் ஒருவரிடம் இருந்து 5 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், 42 வயது நபர் ஒருவரிடம் இருந்து 40 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, மன்னார் வீதி மற்றும் ஓமந்தைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரகைளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.