பலத்த காற்று காரணமாக 245 வீடுகள் சேதம்!

புத்தளம் மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார்.

கருவலகஸ்வௌ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு, புத்தளம் மற்றும் மஹகும்புக்கடவல ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலவும் மழைடனான காலநிலையை கருத்திற் கொண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று மாலை 5 மணி முதல் 4 மாவட்டங்களுக்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி ரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன, கொடகவெல, வெலிகேபொல, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com