
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முன்னாள் அமைச்சர் ரிஷாட்டிக் சகோதரருக்கும் தற்கொலை குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்துள்ளதென,காவல் துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தரணி இரண்டு குண்டுதாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததுடன், குண்டு தாக்குதல் திட்டமிடல், பல தீவிரவாத குழுக்களுடன் கொடுக்கல், வாங்கலை முன்னெடுத்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை ரிஷாட்டின் சகோதரர் குண்டுதாரியொருவருடன் பிரபல ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர், கலந்துரையாடியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென்றார்.
சிறீலங்காவில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதலை நடத்தியவர்களுக்கும் தனது சகோதரர் ரியாத் பதியுதீனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ரியாத் பதியுதீனின் கைது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனைக் கூறியுள்ளார்.
நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை என்றும், இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவுக் கூறியுள்ள ரிக்ஷாட் இதற்கெதிராக தாம் நீதிமன்றை நாடவுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்