20துக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் – நளின்

20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

“நாளை 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றிலிருந்து 14 நாட்களுக்கு இதுதொடர்பான வியாக்கியானத்தை தெரிவிக்க காலம் வழங்கப்பட்டுள்ளது.

நாம் இந்தக் காலத்தில் இதற்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளோம். 20 தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்று அவசியப்படுகிறது. இதனை முன்னிருத்தியே நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியானவர் என்பதற்காக எல்லாம், 20 ஐ நிறைவேற்ற அனுமதியளிக்க முடியாது. அவர் எப்படிப்பட்டவர் எனும் உண்மை இன்று நாட்டு மக்களுக்கு தெரியவந்துள்ளது” – என்றார்.