மாவனல்லை நகரில் அதிகாலையில் மரணபயம் காட்டிய காளை!

நண்பகல் மாவனல்லை நகர்பகுதிக்குள் நுழைந்த வளர்ப்பு காளையொன்று சிறிது நேரம் களேபரத்தில் ஈடுபட்டது.

கயிற்றை அவிழ்த்துக்கொண்டு பிரதான வீதிக்குள் நுழைந்து எதிர்ப்பட்டவர்களையெல்லாம் முட்டிமோதியது. இதனால் அல்லோலகல்லோலப்பட்ட மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

காளை முட்டியதில் ஐந்து பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தகவறறிந்து மாவனல்ல சந்தையிலுள்ள மாட்டிறைச்சிக்கடை மாடுபிடிப்பவர்கள், ஊழியர்கள் உடனே களத்திற்கு வந்து கயிறுபோட்டு மாட்டை மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com