
இங்கிலாந்தில் பணியாற்றும் மூன்றில் ஒரு பங்கு சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவால் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல இங்கிலாந்தும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு 94,000 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 12,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த திங்களன்று இங்கிலாந்து அரசு அங்கு பணிபுரியும் 16,888 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியது. அதில் 34 சதவீதத்தினருக்கு அதாவது 5,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள கவச உடைகள் மற்றும் உயர் பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு தேசிய சுகாதாரப் பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.