முள்ளியவளை கிச்சிராபுரத்தில் வாள்வெட்டு!

முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியில் இருவருக்கிடையில் நேற்று இரவு (18.09.2020) இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது.

இதன்போது இருவர் சண்டையினை தீர்க்க முற்பட்டவர்ககள் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குடும்ப பெண் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் குறித்து மருத்துவமனை பொலீசார் முறைப்பாடு எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.