வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனோ தொற்று உறுதி!

யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த ஊழியர் சுவிஸ் போதகரால் யாழ்பாணம் அரியாலையில் நடாத்தப்பட்ட ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் சுவிஸ் நாட்டை சேர்ந்த போதகருக்கு கோரோனோ வைரஸ்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அரியாலையில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த வடக்கின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலிற்கு உள்ளளாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் கணேசபுரம் பகுதியை சேரந்த நபர் உட்பட சுவிஸ் மதபோதகருடன் நெருங்கி பழகிய 20 பேர் அடையாளம் காணப்பட்டு யாழ் காங்கேசன் துறையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தலில் முகாமில் கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com