எல்லையில் பதற்றம்: போபர்ஸ் பீரங்கிகளை தயார்ப்படுத்தும் இந்திய ராணுவம்!

இந்தியா சீனா எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதை தொடர்ந்து போபர்ஸ் பீரங்கிகளை இந்திய ராணுவம் தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா சீனா எல்லை பிராந்தியமான லடாக்கில் கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து எல்லையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்த எல்லைப் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவத் தளபதிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதன் காரணமாக கால்வான் பள்ளத்தாக்கு ரோந்துப் புள்ளி 15 உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து சீனப்படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

எனினும் பாங்காங் ஏரி பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருவதால் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே கடந்த மாத இறுதியில் இந்தியாவின் நிலைக்களுக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதாக இந்திய ராணுவம் குற்றம் சுமத்தியிருந்தது.

அத்துடன் எல்லை விவகாரம் தொடர்பாக இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதன் காரணமாக எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு சீனாவும் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.

இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா தனது போபர்ஸ் பீரங்கிகளை எல்லையில் தயார்ப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் பீரங்கிகள் ஆபத்து ஏற்பட்டால் தாக்க தயாராகும் எனவும் போர்பஸ் பீரங்கிகளுக்கு அவ்வப்போது பராமரிப்பு தேவை என்பதால் பராமரிப்பு பணியில் வல்லுநர்கள் அமர்த்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1980 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்ட இந்த போபர்ஸ் பீரங்கிகள் கீழ் மட்டும் உயர்மட்ட கோணங்களில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை.

இந்த போபர்ஸ் பீரங்கிகள் கார்கில், ஆப்ரேஷன் விஜய், உள்ளிட்ட இந்தியாவில் நடைபெற்ற பல முக்கியமான போர்களில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com