இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியில் விபத்து; முச்சக்கரவண்டியின் சாரதி உள்ளிட்ட மூவர் பலி

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியின் பின்னால் வந்த லொறி முச்சக்கரவண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இதன்போது, படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த மேலும் இரண்டு பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 48, 53 மற்றும் 57 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.