டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதியதில் கோரவிபத்து

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோட்டார் சைக்கிளின் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவத்தை சேருநுவர பகுதியைச் சேர்ந்த எச் ஏ.கருணாரத்தின 43 வயதுடைய ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாயிலிருந்து தெஹிவத்தைக்குச் சென்ற டிப்பர் வாகனமும், தெஹிவத்தையிலிருந்து கல்லாறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளும் மோதுண்டதிலே இவ்விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிப்பர் வாகனம் வேகமாக சென்றதிலே இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.