மின்சாரம் தாக்கி மாணவன் பலி

மின்சாரம் தாக்கி காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தியத்தலாவை – அலுத்வெல பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவனொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தியத்தலாவை – அலுத்வெல தெற்கு பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது பாதுகாப்பற்ற மின் இணைப்பினூடாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியிருக்கலாமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்