யாழில் இளைஞர்கள் அட்டகாசம் நையப்புடைத்த பொது மக்கள்!

மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை நையப்புடைத்த பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை வட தமிழீழம் ,யாழ் சாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர்கள் இருவரும்    உந்துருளியில்  மதுபோதையில் வாள்கள் சகிதம் உலாவியதோடு பிரதேசத்தின் இயல்பு நிலையை பாதிப்படையச் செய்தனர்.

அதனையடுத்து ஒன்று திரண்ட பிரதேச மக்கள் இருவரையும் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், மோட்டாரச் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.