திலீபன் நினைவுத் தூபியில் சிங்கள பொலிசார் குவிப்பு!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்  அவர்களின் 33 ஆம் ஆண்டு  நினைவு நாள் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில்  வட தமிழீழம் , யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனுடைய நினைவுதினத்தை அனுட்டிக்க யாழ் நீதிமன்றம் இன்று தடைவிதித்தது. இதையடுத்து, இன்று மாலை முதல் திலீபன் நினைவேந்தல் நடைபெறும் என கருதும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூரிலுள்ள திலீபனின் நினைவுத்தூபி மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக பகுதிகளில் அதிகளவான   சிங்கள பேரினவாத பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.