இலஞ்சம் பெற்ற இ.போ.ச சாரதி கைது!

அம்பாறை – நாமல் ஓயா பகுதியில் 30,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சாரதி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு மீண்டும் தொழிலை பெற்றுக்கொடுப்பதற்கான உதவிகளை வழங்குவதாக தெரிவித்து இலஞ்சம் பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.

குறித்த நபரின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புறக்கோட்டை மத்திய பஸ் நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.