2019 க.பொ.த உயர்தரத்திற்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்ரோபரில் வெளியீடு?

2019ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுத்து பல்கலைக்கழக அனுமதிகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் ஒக்ரோபர் முதல் வாரத்திற்கு முதல் வெளியிட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாகவே வெட்டுப்புள்ளிகள் வெளியீடு தாமதமாகியுள்ளதாகவும், இதனை வெகுவிரைவில் வெளியிட ஆணைக்குழு பணியாற்றி வருவதாகவும் மானியங்கள் ஆணைக்குழு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.