
நுவரெலியா, பதுளை உட்பட 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நாளை (16) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.
10 மணிநேரத்துக்கு பின்னர் மாலை 4 மணி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6 மணிவரைஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் தரப்புக்கு அனுமதி வழங்கப்படும்.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள நடைமுறையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதே நிலை நீடிக்கும். அப்பகுதிக்கு செல்வதோ அங்கிருந்து வெளியேறுவதோ முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.