மீசாலை வாள் வெட்டில் பெண் படுகாயம்!

தென்மராட்சி – மீசாலை வடக்கு பகுதியில் நேற்று (12) இரவு பெண் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீசாலை வவா கடையடியில் உள்ள வீடு ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ப நபர்கள் அங்கு வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிறிதரன் பவானி என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.