போதைப் பொருள் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது!

பூஸா சிறைச்சாலையில் 21 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து 3வது நாளாகவும் முன்னெடுத்துவருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 46 கைதிகளில் 25 பேர் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

இதனிடையே, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் போதைபொருள் வர்த்தகம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர்களான பொடி லெசி மற்றும் வெலேசுதா உள்ளிட்ட பிரதான போதை பொருள் வர்த்தகர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.