சற்றுமுன் நடந்த விபத்தில் மாணவன் பலி!

வவுனியா – நொச்சிகுளத்தில் இன்று (13) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த இ.புவிதன் (வயது14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் மரணமடைந்துள்ளார். இவர் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.