வடமராட்சி கிழக்கு மீனவர்களை நம்பவைத்து கழுத்தறுத்த டக்ளஸ்

வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்ட விரோத மீன்பிடி, கடலட்டை தெழில்களில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவதால் தமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று  

எதிர்வரும் 16ஆம் திகதி தொடக் கம் காலவரையறை இன்றிய உணவொறுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் அறிவித்துள்ளது.  வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுடனான சந்திப்பின் பின்னரே வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் சண்முகநாதன் இந்த அறிவிப்பை விடுத்தார்.

 சட்டவிரோத கடற்றொழில்களை உடன் நிறுத்தி பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறு மீன்பிடி அமைச்சரான டக்ளசை கோரியும்  இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதமையாலே இந்த உணவு ஒறுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னான காலபபகுதியில் தனதுவாக்குகளை  அதிகரிப்பதற்காக குறித்த பிரச்சனைகள்  தேர்தலின் பின்னர் தீர்த்து வைக்கப்படும் என டக்ளஸ் பிரச்சாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.