பாசிக்குடா கடலில் மூழ்கி மாணவன் சாவு!

மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) மாலை இடம்பெற்ற சம்பவத்தில், வாழைச்சேனை- செம்மன்ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த யாவாத் முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன், சம்பவதினமான நேற்று அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். (150)