பண்டத்தரிப்பில் ஹெரோயினுடன் பெண் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (11) இரவு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பெண் தொடர்ச்சியாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அவரது வீட்டை சுற்றிவளைத்து பொலிஸார் அவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.