
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் நடந்த அன்று முதல் நேற்று (14) வரை இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது.
இதன்படி குற்றப்புலனாய்வு பிரிவின் (சிஐடி) கீழ் 119 பேரும், பயங்கரவாத விசாரணை பிரிவின் (ரிஐடி) கீழ் 78 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.