விடத்தற்பளையில் சங்கிலி அறுப்பு!

தென்மராட்சி – விடத்தற்பளை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலி இன்று (12) மதியம் அறுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இவ்வாறு ஒரு பவுண் பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.