மந்துவில் படுகொலையின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில்  15.09.1999 ஆம் ஆண்டு   பேரினவாத சிங்கள விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில்

படுகொலை செய்யப்பட்ட 22அப்பாவி பொது மக்களுடைய 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் குறித்த பகுதியில் நினைவு நிகழ்வுகள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்

தாயக உறவுகள் நினைவேந்தால் அமைப்பினால் மந்தவில் சந்திப்பகுதியில் எதிர்வரும் 15.09.2020 அன்று சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.