மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு முன்னணி ஆதரவு

மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கான முயற்சிகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றிய கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இதனை தெரிவித்துள்ளார்.

மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ அல்லத வேறு எந்த அமைச்சரோ மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தனது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.