77 கிலோ கிராம் ஆபத்தான நைட்ரிக் அமிலத்துடன் சிக்கிய இருவர்!

களுத்துறை பண்டாரகம, அட்டுளுகம ஜயகொடி கந்த பிரதேசத்தில் இரண்டு வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 77 கிலோ கிராம் நைட்ரிக் அமில தொகையுடன் இரண்டு பேரை பாணந்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர்.

பண்டாரகமை பொலிஸ் அதிகாரிகளை தாக்கி விட்டு தலைமறைவாக இருக்கும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக நடத்திய தேடுதலின் போது இரண்டு வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நைட்ரிக் அமிலத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் இந்த நைட்ரிக் அமிலம் வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.