21 வயது யுவதி தற்கொலை!

கட்டுகஸ்தோட்டை மகாவலி கங்கையில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் குறித்த கங்கையில் யுவதி ஒருவர் பாய்வதனை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

உயிருக்காக போராடிக்கொண்டிருந்த நிலையில், யுவதியை மீட்க அப்பகுதி இளைஞர்கள் கங்கையில் குதித்துள்ளனர்.

யுவதி நீரில் மூழ்கி காணாமல் போனதால் பல மணித்தியாலங்கள் யுவதி தேடப்பட்டு வந்துள்ளார்.

எனினும், யுவதி நீரில் இழுத்து செல்லப்பட்டு கங்கையில் பிரிதொரு இடத்தில் சடலமாக கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளார்.

மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

21 வயதுடைய ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றிய யுவதியே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.