கரணவாயில் தனிமையிலிருந்த பெண்ணிடம் மீன் வியாபாரி கைவரிசை

தனிமையில் வாழ்ந்த வயோதிப பெண்ணிடம் லாவகமாக பேசி இரு தங்க மோதிரங்களை எடுத்து சென்ற மீன் வியாபாரி தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் இன்று மதியம் கரணவாய் மத்திப் பகுதியிலுள்ள தனிமையில் வசித்து வந்த தங்கவேலாயுதம் சின்னத்தங்கம் என்பவர் வீட்டிலேயே இடம்பெற்றது. இன்று மதியம் குறித்த வீட்டிற்குச் சென்ற மீன் வியாபாரி குறித்த வயோதிப பெண்ணிடம் நீண்ட நேரம் கதைத்து ஏமாற்றி 1.5 பவுண் நிறையுடைய 2 மோதிரத்தையும் 2ஆயிரம் ரூபா பணத்தையும் ஆபேஸ் பண்ணிகொண்டு தலைமைறைவாகி விட்டார். 

இது தொடர்பாக நெல்லியடி   பொலிஸாருக்கு முறையிட்டதைத் தொடர்ந்து தீவிரவிசாரணையை முன்னெடுப்பட்டுள்ளது.