இரவு உணவின் பின் உறங்கச் சென்றவர் காலையில் எழுந்திருக்கவில்லை: விசாரணையில் காவல்துறை

இரவு உணவு உண்டுவிட்டு உறங்கச் சென்றவர் அதிகாலை உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

சுன்னாகம், காளி கோயிலடியைச் சேர்ந்த யோகந்திரன் கேமராஜ் (வயது-31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் பணியாற்றும் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழமைபோன்று உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை அவர் அசைவற்றுக் காணப்பட்டதால் வீட்டிலிருந்தவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.