புத்தரின் உருவம் பதிக்கப்பட்ட உடையால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

நாரஹேன்பிட்டியில் புத்தர் சிலை உருவம் பதிக்கப்பட்ட உடையை அணிந்துவந்த பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு வருகைதந்த இவரின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் மருத்துவர் ஒருவருடைய இல்லத்தில் பணிபுரியும் பெண்ணொருவர் குறித்த மருத்துவர் சுகயீனமடைந்த நிலையில் – அவரை பார்வையிட இங்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.