மது மரப் பழ சீசன் ஆரம்பித்தது!

இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டதென கூறப்படும் மது மரம் அல்லது ஆங்கிலத்தில் சைக்காடேல்ஸ் (Cycadales) என்று சொல்லப்படும் மரத்தின் பழச் சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது.

இந்த மது மரம் அல்லது சைக்காடேல்ஸ் என்பது விதை தாவர வரிசையாகும். இது குறிப்பாக உயரமாகவும், சிறிய மரமாகவும் வளரக்கூடியது.

இதனுடைய பழத்தினை வெய்லில் காய வைத்து மாவாக்கி பிட்டு, முறுக்கு உள்ளிட்ட உணவு வகைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது மாத்தளை – லக்கல கிராம மக்களிடையே ஒரு சத்தான உணவாக பிரபலமாக உள்ளது.