அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்ட குடும்பஸ்தருக்கு எமனாக வந்த முள்ளம்பன்றி

வீதியின் குறுக்காக முள்ளம் பன்றி பாய்ந்த நிலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சித்த குடும்பஸ்த்தர் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கேகாலை – அம்பன்பிட்டிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்  51 வயதான வசந்த ஜயசிங்க என்ற 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் பணி நிமித்தம் உயிரிழந்த நபர் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அதிகாலை வேளையில் மழையுடனான வானிலை காணப்பட்டுள்ள நிலையில்,வீதியின் குறுக்கே திடீரென முள்ளம்பன்றி ஒன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மோட்டார் சைக்கிளை குறித்த நபர் நிறுத்த முற்பட்டபோது  கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.