சந்தடி சாக்கில் அடுத்த கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய நாவற்குழி விகாரை: தூக்கத்தில் தமிழர் தரப்பு

யாழ்.நாவற்குழி – விகாரை அமைந்துள்ள காணியில் பிறிதொரு கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றிருக்கின்றது. 

விகாரைக்கு தேவையான கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காகவே இவ்வாறு கட்டிடம் அமைக்கப்பட்டதாக இன்று காலை இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.  

ஏற்கனவே விகாரை அமைப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களும், அரசியல்வாதிகளும் மறந்த நிலையில் புதிதாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.