போதைப்பொருள் ஆசாமியை கைது செய்ய போன இடத்தில் மக்களிடம் வாங்கிக் கட்டிய காவல்துறை

போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்து கொண்டு செல்லும்போது பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது பொதுமக்களின் தாக்குதலுக்கு இலக்கான 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். அளுத்கம மாராவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும்போது  பொலிஸ்  வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதனால் உண்டான பதற்றமான நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அண்டியுள்ள பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரும்  சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.