தவறான தண்டப்பண அறவீடு; 40 இலட்சத்தை மீள செலுத்துமாறு தீர்ப்பு!

மதுவரிச் சட்டத்தின்படி மதுபானசாலை ஒன்றுக்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டப்பணத்திற்கு மேலதிகமாக அறவிட்ட 3,650,000 ரூபாய் பணத்தை மீளச் செலுத்துமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.

மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகளினால் இந்த தீர்ப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி – நாவலபிட்டிய பகுதியை சேர்ந்த மேரி பெருமாள் உட்பட மூவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தங்களால் நடத்திச் செல்லப்பட்ட மதுபானசாலையை சுற்றிவளைத்த மதுவரித் திணைக்கள அதிகாரிகள் அதற்காக 50 இலட்சம் ரூபாய் தண்டப் பணம் விதித்து அதில் 40 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக பெற்றுக் கொண்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மதுவரித் திணைக்கள சட்டத்தின் அடிப்படையில் குறித்த தவறு தொடர்பில் அறவிடக்கூடிய அதிகூடிய தண்டப்பணம் 5 இலட்சம் ரூபாய் என குறிப்பிட்ட மனுதாரர்கள், அது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.