கரடியனாறு விபத்தில் மூவர் படுகாயம்!

மட்டக்களப்பு – கரடியனாறு, மகாஓயா பிரதான வீதி மரப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (08) காலையில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தினர்.