ஹெரோயினுடன் யாழில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் சோனக தெரு பகுதியில் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் 320 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அதேயிடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (08) அதிகாலை 6 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் சோனகதெரு பகுதியில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.