10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது!

கல்பிட்டி பகுதியில் வைத்து 10 கிலோ தங்கத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனத்தில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.