பௌத்த மகா சம்மேளனத்தால் வீடு கையளிப்பு!

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான புணாணை கிராமத்தில் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தினால் வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இரண்டாம் கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு வீடு பயளாளிக்கு கையளிக்கும் நிகழ்வும், மூன்றாம் கட்டமாக மூன்று பயனாளிகளுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று (07) இடம்பெற்றது.