நாடாளுமன்றம் செல்வாரா பிரேமலால்? – இன்று தீர்ப்பு!

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பான தீர்ப்பை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) அறிவிக்கவுள்ளது.

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து பிரேமலால் ஜயசேகர தன்னை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ஊடாக ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார். அதன்மீதான தீர்ப்பே இன்று வழங்கப்படவுள்ளது.