20ம் திருத்தம் குறித்து இவ்வாரம் கூட்டமைப்பு தீர்மானிக்கும்

20வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தங்கள் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.