பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை முதல் சற்று குறைவடையும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளது.