வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்து ஒருவர் பலி இருவர் காயம்

நவகமுவ, கொத்தலாவல பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொத்தலாவல பகுதியின் பாசல் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீட்டின் சுவரே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ள நிலையில், மலாபேயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.