தனிமைப்படுத்தல் நிலையமாக மாறவுள்ள போகம்பறை சிறை

விளக்கமறியல் கைதிகளின் தனிமைப்படுத்தலுக்காக கண்டியில் அமைந்துள்ள பழைய போகம்பறை சிறைச்சாலை கட்டிடத்தை பயன்படுத்த சிறைச்சாலை திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி, கொழும்பு மற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள சிறைகளுக்கு அனுப்பப்படும் கைதிகள் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு இந்த மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சுமார் 500 கைதிகள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.